பிரேசிலில் ரஷியா அதிபர் புதினை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுடன் ரஷியா நட்புறவு கொண்டுள்ளது. இது இந்திய குழந்தைகளுக்குக்கூட தெரியும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது ; இரு நாடுகளிடையே நல்லுறவு நீடிக்கவேண்டும் . நாடு விடுதலைபெற்றது முதலே, இந்தியாவுடன் ரஷியா நட்புறவு கொண்டுள்ளது. இது இந்திய குழந்தைகளுக்குக்கூட தெரியும். அணுசக்தி, ராணுவம் மற்றும் எரி சக்தி உள்ளிட்ட துறைகளில் ரஷியாவுடனான உறவை மேம்படுத்த இந்தியா உறுதியாக உள்ளது . ரஷியாவில் இந்திய மாணவர்கள் கல்விகற்கும் வசதியாக விசா நடை முறைகளை எளிதாக்க வேண்டும் என்றார்.

மேலும் டிசம்பர் மாதம் புதின் இந்தியாவிற்கு வரும் போது ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிடுமாறு மோடி அவருக்கு அழைப்புவிடுத்தார். பின்னர் இதற்கு பதில்அளித்த புதின், இந்திய பிரதமர் மோடியின் யோனை சிறந்தது. இந்தியா ரஷ்யா இடையே போதுமான அளவு நட்புறவு நீடிக்கிறது. இதற்கு அணுமின் நிலையத் திட்டம் அடையாளமாக திகழ்கிறது என்று கூறினார்.

Tags:

Leave a Reply