நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு விரும்புவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான யோகி அதித்யநாத் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது இதை அவர் தெரிவித்தார்.

உ.பி., மாநில கோரக்பூர் தொகுதி எம்.பி. அதித்யநாத் பேசும் போது, ‘நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காக்கவேண்டி நாடுமுழுவதும் ஒரே வகையான பொது சிவில்சட்டம் மிகவும் முக்கியம். இதை அமல்படுத்தும் எண்ணம் அரசிடம் உள்ளதா?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ரவிசங்கர்பிரசாத், ‘நாடு முழுவதுக்கும் பொது சிவில்சட்டம் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது. இதற்கான வழி முறைகள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44 ஆவது பிரிவின்படி உள்ளது. இதன் அடுத்தகட்டமாக அது பற்றி சம்பந்தப்பட்டவர்களுடன் பரந்த ஆலோசனை செய்யவேண்டியது அவசியம்’ என கூறினார்

Leave a Reply