மத்திய ரெயில்வேதுறை அமைச்சர் சதானந்த கவுடாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்துபேசினார்.

அப்போது, கன்னியாகுமரி ரெயில்நிலையத்தை முனையமாக மாற்றவும், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் பாராளுமன்றத்தில் அறிவித்ததற்காக பொன்னாடைபோர்த்தி, இனிப்புவழங்கி சதானந்த கவுடாவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

நாகர்கோவில் டவுண்ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணியினை துரிதபடுத்தவும், கன்னியா குமரி முதல் சென்னைவரை கிழக்கு கடற்கரை ரெயில்வேபாதை அமைக்கவும் சதானந்த கவுடாவிடம், பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கைவிடுத்தார். அதற்கு சதானந்தகவுடா, கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணனிடம் உறுதியளித்தார்.

Leave a Reply