மலேசியவிமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட வான்பகுதியில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடியின் விமானத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்.

இது குறித்து, தில்லியில் வெள்ளிக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : “பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் சில காரணங்களுக்காக, பிரதமர் நரேந்திரமோடி ஜெர்மனியில் புதன்கிழமை இரவு தங்கிவிட்டு வியாழக் கிழமை தாயகம் திரும்பினார். அவரது விமானத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக வெளியான தகவல்கள் தவறான யூகத்தின் அடிப்படை யிலானவை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் போது, உக்ரைன் வான்பகுதியில் செல்லவேண்டாம் என்று ஏர் இந்தியா மற்றும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

விமான வழித் தடத்தில் ஐரோப்பிய நாடுகளையும், ஆசிய நாடுகளையும் இணைக்கும் முக்கியமண்டலமாக உக்ரைன் வான் பகுதி விளங்குவதால், அந்தப்பகுதியில் விமானத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இந்திய அரசு எச்சரித்துள்ளது

Leave a Reply