உக்ரைனில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா ஆதரிப்பதாக மலேசிய பிரதமருக்கு நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மலேசியப் பிரதமர் முகமது நஜீப் ரசாக்கிற்கு நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில் மோடி கூறியிருப்பதாவது:- “மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக உலகம்முழுவதும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நியாயமானது. எந்த சூழ்நிலையில் இந்தச்சம்பவம் நடைபெற்றது என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை இந்தியா ஆதரிக்கிறது.

சிலமாதங்களுக்கு முன் மலேசியவிமானம் ஒன்று காணாமல் போன துயரச்சம்பவம் நிகழ்ந்தது. அது என்ன ஆனது என்பது இதுவரை தெரியாமல் அந்த விவகாரத்துக்கு முடிவே இல்லாமல் போய்விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply