நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் 19முறை அத்து மீறியுள்ளதாகவும் இதற்க்கு இந்திய தரப்பும் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி பார்லிமென்டில் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராஜ்ய சபாவில் அருண் ஜெட்லி மேலும் கூறியதாவது: நமது ராணுவம் யாருக்கும் யாருக்கும் தலைவணங்காது. இதற்கு இந்த அரசும் அனுமதிக்காது.ஐ.மு.கூ. ஆட்சிக் காலத்தின்போது, நரேந்திர மோடி, எல்லைப்பகுதியில் நடைபெறும் தாக்குதல் விவகாரத்தில் மன்மோகன்சிங் அரசு பலவீனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

ஆனால் தற்போதும் அதேநிலையை தொடர்ந்து நீடித்துவருவதாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த, உங்களது ஆட்சி?க்காலத்தில், இந்திய ராணுவ வீரர்களின் தலைகள், பாகிஸ்தான் படைகளால் கொய்து செல்லப்பட்டன. ஆனால், எங்கள் ஆட்சியில் அது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கவில்லை, நடக்கவும் அனுமதிக்க மாட்டோம் . மோடி பதவியேற்ற பின்னர், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்த போது, எல்லையில் அமைதியை நிலவுவதை வலியுறுத்தினார் என கூறினார்.

Leave a Reply