கொரிய நாட்டின் அதிபர் பார்க்ஜியுன்–ஹையே, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி பெற்றவெற்றிக்காக வாழ்த்து தெரிவித்ததுடன், இந்தியகொரியா இடையேயான நட்புறவை அனைத்து

துறைகளிலும் விரிவு படுத்தவும் விருப்பம் தெரிவித்தார். கொரிய நாட்டுக்கு வருகைதர நரேந்திரமோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துகொண்ட நரேந்திர மோடி, பொது நலனுக்காகவும், இரு நாடுகளுக்கும் பலன் ஏற்படும் வகையிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்ற விருப்பம்தெரிவித்தார்

Leave a Reply