·ரம்ஜான் நோன்பு இருந்த ரயில்வே ஊழியர்வாயில் சிவசேனை எம்பி. ராஜன்விச்சாரே செயலுக்கு பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி அதிருப்தி வெளிப்படுத்தினார்.

இச்சம்பவம் குறித்து அத்வானி கருத்தை நிருபர்கள்கேட்டனர். இதற்கு பதிலளித்து அத்வானி கூறுகையில் “இது தவறு” என்று கூறிவிட்டு சென்றார். டெல்லியிலுள்ள மகாராஷ்டிரா பவனில் சப்பாத்தி தரக் குறைவாக இருந்ததாக குற்றம்சாட்டி ரயில்வே கேட்டரிங்பிரிவின் சமையலறைக்குள் அத்து மீறி நுழைந்த ராஜன்விச்சாரே தலைமையிலான 11 சிவசேனை எம்.பி.க்கள் கேட்டரிங் சூப்பர்வைசரிடம் தகராறுசெய்தனர்.

அப்போது, சூப்பர்வைசர் வாயில் சப்பாத்தியை திணித்து, இதை உங்களால் சாப்பிடமுடியுமா என்று எம்.பி அடாவடியாக கேட்டார். எம்பி கேட்ட சூப்பர்வைசர் அர்ஷத் என்ற பெயர்கொண்ட முஸ்லிம். அவர் ரம்ஜான் நோன்பு இருந்து வருகிறார். பகலில் அவர் சாப்பிடுவதில்லை. எனவே இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply