டாலர்களைவிட உலக வங்கியின் அறிவுத் திறனிலும் வல்லுநர் தன்மையிலும் நாங்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளோம் என உலகவங்கித் தலைவர் ஜிம் யாங்கிம்மிடம் (Jim Yong Kim) பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

2014 ஜூலை 23 அன்று நிகழ்ந்த உலகவங்கித் தலைவருடனான சந்திப்பு, மிகச்சிறப்பாக இருந்தது. வருங்காலத்தில் இணைந்து பணிபுரிவதற்கான பல்வேறுவழிகளை விவாதித்தோம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்

மேலும் பிரதமர் தனது டுவிட்டர் வலைத் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:

மக்களை ஈர்க்கும்வகையில் குறிப்பிட்ட நேரத்தில் பணிபுரிவது குறித்து விவாதிக்கப்பட்டது. நாம்வாழும் இந்த உலகில் வேகம் மிகமுக்கியமானது. விரைவில் நடைமுறைப்படுத்துவதும் அவசியம் ஆகும். உலகவங்கியின் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது தாக்கத்தை அதிகரிக்கும்.

டாலர்களைவிட உலக வங்கியின் அறிவுத்திறனிலும் வல்லுநர் தன்மையிலும் நாங்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளோம். உலகவங்கி நமது தகவல் வங்கியாக இருக்க டாக்டர் கிம் ஒப்புதல் அளித்துள்ளார். பேரளவு உற்பத்திற்கான உத்திகளை மட்டுமல்லாமல் வெகு ஜனத்தால் உற்பத்தி செய்வதற்கான உத்திகளையும் நாங்கள் உலகவங்கியிடமிருந்து அறிய ஆர்வத்துடன் உள்ளோம்.

இன்று உலகம் எப்படி பொருட்களைச் சந்தைப் படுத்துவது என்பதில் அதிக கவனம்செலுத்துகிறது. ஆனால், எதிர்காலத்தில் தொழில்திறன் மிக்க மக்களை கண்டறிவது ஒருமுக்கிய பிரச்சனையாகும். நாம் இந்தத்திசையை நோக்கிச் செயல்பட வேண்டும். கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம், உலகவங்கிக்கு ஒரு ஊக்குவிக்கும் திட்டமாக விளங்கும் என்று நான் டாக்டர் ஜிம் யாங்கிம்மிடம் தெரிவித்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply