ஆகஸ்டு முதல் வாரத்தில் பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக நேபாள நாட்டுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நேபாள நாட்டுக்கு அவர் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். 18 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இந்திய தலைமைப் பதவியில் உள்ள ஒருவர் அந்நாட்டிற்கு செல்வது பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டு பிரதமர் சுஷில்கொய்ராவின் அழைப்பை ஏற்ற மோடி வரும் 3 மற்றும் 4 தேதிகளில் தங்கள் நாட்டிற்கு வரஉள்ளதாக அந்நாட்டு வெளியுறுவுத் துறை அமைச்சர் மகேந்திரபாண்டே கூறியுள்ளார். நேற்று பிரதமர் கொய்ராலாவை சந்தித்து ஆலோசனை நடத்திய சிறிது நேரத்திலேயே மோடி பயணத் திற்கான அறிவிப்பை பாண்டே வெளியிட்டார். மோடியின் பிரதமர் பதவி ஏற்புவிழாவில் கலந்து கொண்ட போது தங்கள் நாட்டிற்கு வருமாறு கொய்ராலா அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . 

Tags:

Leave a Reply