பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று இன்றுடன் (26.07.2014) 60 நாட்கள் நிறைவடைகின்றன. இதனை கொண்டாடும்விதமாக mygov.nic.in புதிய இணையதளத்தை நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், இந்த இணையதளத்தில் நாட்டின் வளர்ச்சிதிட்டங்களுக்கு தேவையான ஆலோசனைகளை அனைவரும் அளிக்கலாம். பொது மக்களின் பங்களிப்பு இல்லாமல் நாட்டை வளர்ச்சிபாதைக்கு கொண்டு செல்ல இயலாது.

கடந்த 60 ஆண்டுகால ஆட்சியில் நாட்டுமக்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. இதனை நிரப்புவதன் மூலமே ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை தொடங்கமுடியும்.

எனவே சிறப்பான ஆட்சிமுறையை மேற்கொள்ள பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கலாம். நாட்டுக்கு சேவைசெய்யும் எண்ணம் கொண்டவர்கள் பலதிட்டங்களை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க இந்த இணைய தளம் பெரும் உதவியாக இருக்கும்.

அவர்களுடன் இணைவதற்கு இந்திய அரசு தயாராக உள்ளது. அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க தயாராக உள்ளது. சிறந்ததொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை இந்தியாவில் உள்ளவர்கள், வெளிநாட்டு இந்தியர்கள் பயன்பெறும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார்

Leave a Reply