மகாராஷ்டிர பவனில் நடந்த சம்பவத்தை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஓட்டுவங்கி அரசியலுக்கு பயன் படுத்துவதாக, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், டில்லி மகாராஷ்டிர பவனில், தரமில்லாத உணவை கண்டித்தே, அதை வலுக்கட்டாயமாக, சிவசேனா எம்பி.,க்கள் ஊழியருக்கு திணித்துள்ளனர். இந்தசம்பவத்தை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுவங்கி அரசியலுக்கு பயன் படுத்துகின்றனர். இந்த சம்பவம் மூலமாக பாஜக., மற்றும் சிவசேனா கட்சிகளின் இமேஜை கெடுக்க முயல்வதாகவும் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார்

Tags:

Leave a Reply