பாஜக, இந்து முன்னணி பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்துமுன்னணி மாநிலத் தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை (ஜூலை 28) பிற்பகலில் மர்மக் கடிதம் ஒன்று வந்ததாக தெரிகிறது. அந்தகடிதத்தில் அனுப்புநர் என்ற இடத்தில் பாலக்காடு, கேரளம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் எங்கிருந்துவந்தது என்பதற்கான அஞ்சல்துறை முத்திரை தெளிவாக இல்லை.

கடிதத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பாஜக, இந்துமுன்னணி தலைவர்களைக் கொலை செய்யப் போவதாகவும் .. சென்னையில் பி.ஜே.பி.யில் 'தீ' என்றாலும் தஞ்சையில் 'ம்' என்றாலும், சிவகங்கையில் 'ஜா' என்றாலும், கோவையில் 'ஸ்' என்றாலும், திருச்சியில் 'ர்' என்றாலும், விருதுநகரில் 'தீ' என்றாலும் முன்னணியில் சென்னை 'ன்' என்றாலும், திருப்பூர், கோவையில் 'ணி' என்றாலும், நெல்லையில் 'ஜா' என்றாலும் அனைவரும் துன்பத்துக்கு ஆளாவர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது

இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில்மட்டும் இந்துமுன்னணி அலுவலகத்துக்கு 5 முறை இதுபோன்ற மிரட்டல் கடிதங்கள் வந்ததாக புகாரில் குறிப்பிடப்படடுள்ளது.

Tags:

Leave a Reply