ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் தற்போது நடைபெற்று வரும் 20ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வேலூரைச் சேர்ந்த 22 வயதான சதீஷ் சிவலிங்கம்;, 77 கிலோ பிரிவினருக்கான பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று பாரதத்திற்கு குறிப்பாக தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

மிகச் சிறந்த விளையாட்டுச் சாதனை வீரரான அவர் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட இம் முதல் வாய்ப்பிலேயே மகத்தான வரலாறு படைத்தது தமிழர்களுக்கு பெருமகிழ்ச்சி தரும் செய்தியாகும். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

அவர் மென்மேலும் தனது ஆற்றலைப் பெருக்கி, ஆசியப் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் பெரும் சாதனைகளைப் படைப்பார் என்ற நம்பிக்கையோடு அவருக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மீண்டும் இதய ப+ர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று பாஜக மாநில தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply