பாஜக.,வைச் சேர்ந்த 323 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகுறித்த தகவல்களை பெற அமைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் குரூப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாஜக தனது 323 நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் வாட்ஸ் ஆப் குரூப்பில் சேர்த்துள்ளது. இந்தகுரூப் புதன் கிழமை உருவாக்கப்பட்டது. இந்த குரூப் மூலம் எம்பி.க்கள் கட்சி தொடர்பான தகவல்களை பெறலாம். ஆனால் யாரும் ஜோக்ஸுகளை பரிமாறிக் கொள்ளக் கூடாது. மேலும் எம்.பி.க்கள் பாஜக வாட்ஸ் ஆப் குரூப்பில் என்ன செய்கிறார்கள் என்பது கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப் படும். பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், ட்விட்டரில்தான் செய்யும் செயல்கள் குறித்து ஏற்கனவே அவ்வப்போது தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply