பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து, இலங்கை ராணுவத்தின் இணையதளம் வெளியிட்ட அவதூறு செய்திகளுக்கு பலத்தகண்டனம் எழுந்ததை தொடர்ந்து , இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.

தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம், கச்சத் தீவு விவகாரம் உள்ளிட்டவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கிண்டல்செய்து, இலங்கை ராணுவ இணைய தளத்தில், கேலிச் சித்திரத்துடன் சில ஆட்சேப கரமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.இதை தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பையடுத்து இலங்கை அரசின் ராணுவ இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய செய்தி நீக்கப்பட்டது., ‘அந்த இடத்தில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்’ என்ற தலைப்பில், அந்நாட்டு ராணுவம் செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், ‘இந்த இடத்தில் வெளியாகி இருந்தசெய்தி, முறையான அனுமதியின்றி, தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டது. அதில் இடம்பெற்ற கருத்துகளுக்கு, இலங்கை அரசு எந்தவிதத்திலும் பொறுப்பாகாது. நடந்த செயலுக்கு, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்புகேட்கிறோம்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply