இந்திய பிரதமர் நரேந்திரமோடி நேபாள நாட்டில் 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேபாளத்துக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் சென்ற இந்தியபிரதமர், நரேந்திர மோடிதான். இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. நேபாள அதிபர் ராம்பரன் யாதவ், பிரதமர் சுசில்கொய்ராலா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
நேபாள பாராளுமன்றத்திலும் பேசிய மோடி, நேற்று அங்குள்ள பழமையான பசுபதி நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.. நேற்றுடன் பிரதமரின் சுற்றுப்பயணம் முடிந்தது. இதைத்தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், இருநாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உறவுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் விமானம் மூலம் நேற்று இரவு நரேந்திரமோடி இந்தியா திரும்பினார்.