இரண்டாம் உலகப் போரின்போது (1945–ம் வருடம் ஆகஸ்டு 6ந் தேதி) ஜப்பானின் ஹிரோஷிமா நகர்மீது பயங்கர வெடிகுண்டை அமெரிக்க வீசியது. இதில் ஒருலட்சத்து 40 ஆயிரம்பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் 69ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி பிரதமர் நரேந்திரமோடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்தெரிவித்து தனது டுவிட்டர் வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

”ஹிரோஷிமாவில் நடந்தவெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நாம் அனைவரும் இன்று நினைவுகூருகிறோம். இது போன்ற ஒரு அசம்பாவித சம்பவத்தை இனிமேல் வேறு எங்கும் மனிதசமுதாயம் எதிர்கொள்ளாது என்று நான் நம்புகிறேன். வரும்காலங்களில் உலகத்தில் அமைதி நிலவவும், மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்” இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

Leave a Reply