இந்தியர்கள் பலர், தாய்மொழியை மறந்துவிட்டு ஆங்கில மோகம்பிடித்து அலைகிறார்கள் என பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த ஒருநிகழ்ச்சியில் பேசிய அவர்,

வெளிநாடு செல்லும் போது பலரும் தங்கள் தாய்மொழியில்தான் பேசுகிறார்கள். ஆனால், இந்தியர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதைபார்த்தால் வேதனையாக உள்ளது. நான் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் பிறந்தவன். வெளிநாடு செல்லும் போது இந்தியர்கள் மற்றவர்களுடன் மட்டுமல்லாமல், தங்களுக்குள்ளேயும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

தங்கள் சொந்தமொழியை விட்டுவிட்டு அடுத்தவர் மொழியை பேசுவது சரியல்ல. இந்தியர்கள் எந்தளவுக்கு தங்கள்மொழியை பேசுகிறார்களோ அந்த அளவுக்கு அதனை உலகம் முழுவதும் பரப்பமுடியும் என்றார்.

Leave a Reply