அனைத்து துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துவிவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்தியரசு ஒரு அதிரடி உத்தரவை அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கு அனுப்பியுள்ளது.

லோக் அயுக்தாவை அமல்படுத்தும் அரசின் நடவடிக்கையாக அமைச்சக ஊழியர்கள், அனைத்து துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது அசையும் மற்றும் அசையாசொத்து விவரங்களை பொதுமக்கள் பார்க்கும்வகையில் அந்தந்த அமைச்சகங்களின் வலைத்தளங்களில் குறித்த தேதிக்குள் வெளியிட வேண்டும்.

எந்த அரசு ஊழியராவது சொத்துவிவரத்தை வெளியிடாமல் இருந்தாலோ அல்லது தவறான தகவல்களை அளித்தாலோ அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த சொத்துக்களையாவது மறைத்தால், அது ஊழலில் வந்ததாக கருதி பறிமுதல்செய்யப்படும். ஊழியர்கள் தங்கள் மற்றும் தங்களது குடும்பத்தினரின் சொத்துக்களை உரியநேரத்தில் வெளியிடுகிறார்களா? என்பதை அமைச்சகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply