காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் பனிப் பகுதிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பயணம் செய்கிறார். .

உலகின் மிகஉயரமான போர்க்களமாக கருதப்படுவது ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மாவட்டத்தில் உள்ள பனி சூழ்ந்த சியாச்சின் மலைப்பகுதியாகும்.

பிரதமர் நரேந்திர மோடி கார்கில் மற்றும் லடாக் மாவட்டத்தில் உள்ள லே பகுதிகளில் மின் தொடங்கி வைப்பதற்காக நாளை (செவ்வாய்க் கிழமை) செல்கிறார்.

அப்போது அவர் சியாச்சின் பனிப்பகுதிக்கும் சென்று பார்வையிடுவார் எனவும் அவருடன் இந்திய ராணுவ தளபதி தல்பீர்சிங் சுஹாக்கும் செல்வார் என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடி சியாச்சின் பனிப்பகுதியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் 3 ஆயிரம் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சியாச்சின் பனிப் பகுதியின் பெரும்பாலான போர் நிலைகள் 16 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரம்கொண்டவை. இவற்றில் பானே போஸ்ட் என்னும் போர்நிலை அதிகபட்சமாக 22 ஆயிரம் அடி உயரம் கொண்டத என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply