சகோதரத்துவத்தை உணர்த்தும் 'ரக்ஷா பந்தன்' விழா, மகளிர் அணி சார்பில் தி.நகரில் பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், மாநில அமைப்பு

பொது செயலாளர், மோகன் ராஜூலு உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ராக்கி கயிறுகட்டி இனிப்பு வழங்கினர். அவர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், பொது செயலாளர் வானதிசீனிவாசன், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சரளா, ரமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply