டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி காலை மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

பிரதமர் மோடி பேசுகையில்;

பிரதமராக அல்லாமல் நாட்டு மக்களின் முதல் ஊழியனாக இருக்கவே விரும்புகிறேன். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்வோம். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைப்பதற்கு உறுதியேற்கும் நாள் இது. தடைகளைத் தகர்த்தெறிந்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். நாடு வலிமை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம். இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல பாடுபடுவேன்.

மக்களால்தான் தேசம் வலுப்பெற்றதே தவிர, அரசியல்வாதிகளால் அல்ல. சாதாரண மக்களே நாட்டை கட்டமைக்கின்றனர்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட முன்னாள் பிரதமர்களுக்கு பாராட்டுக்கள். அனைத்து அரசுகளும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உள்ளன. ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாடு மேலும் வளர்ச்சி அடைய முடியும்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். ஏற்றுமதியில் நாடு சிறந்து விளங்க உற்பத்தித் துறையினர் பாடுபட வேண்டும்.

நாட்டை முன்னேற்ற திறன் மேம்பாடு தேவைப்படுகிறது. அரசுத் துறைகளுக்குள்ளேயே முரண்பாடுகள் இருப்பதால் நாடு எப்படி முன்னேறும்?. அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. நாடு முன்னேற்றபாதைக்கு செல்ல 10 ஆண்டுகளுக்குள் சாதி, இன வேறுபாடுகளை களைய வேண்டும்.

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. மகள்களை போல் மகன் களையும் பெற்றோர்கள் கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும். நாட்டில் 1000 ஆண்களுக்கு 940 பெண் குழந்தைகள் பிறக்கின்றன. பெண் குழந்தைகளை கருவறையிலே மருத்துவர்கள், பெற்றோர்கள் கொல்ல வேண்டாம். பேராசைக்காக பெண் குழந்தைகளை பலிகொடுக்காதீர்கள். பெண் குழந்தைகளின் கனவை நிறைவேற்ற வேண்டும்.

வன்முறையை கைவிட்டு சகோதரத்துவத்தை மேம்படுத்த வேண்டும். மாவோயிஸ்ட்கள் அமைதிப்பாதைக்கு திரும்ப வேண்டும். எழைகள் வங்கிக் கணக்கு தொடங்க ஜன்தான் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். என்று கூறி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்

Tags:

Leave a Reply