ஏழை எளியோருக்கும் நிதி அதிகாரம் அளிக்கும் வகையில், ‘பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா’ என்ற பெயரிலான திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி, டெல்லி சுதந்திரதின விழா உரையில் அறிவித்திருந்தார். .

இந்ததிட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு டெபிட்கார்டுடன் (கடன் அட்டை) கூடிய வங்கிக்கணக்கு தொடங்குவதுடன், ஒருலட்சம் ரூபாய் காப்பீடும் செய்யப்படும்.

இந்நிலையில் ‘பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா’ என்ற பெயர் காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கேற்று மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்க பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் தொடங்கிய ‘மைகவ்’ இணைய தளத்தின் வாயிலாக ஒருபோட்டி நடத்தப்பட்டது. அதில் திட்டவிவரத்தை சொல்லி, அதற்கு பெயர் சூட்டுமாறு கோரப்பட்டது.

6 ஆயிரம்பேர் பங்கேற்று பெயர்களை தெரிவித்தனர். ஒருநடுவர் குழு பரிசீலித்து, ஒரு சிறிய பட்டியலை தயாரித்தது. அதில் இருந்து தான் ‘பிரதமர் மக்கள் பணம் யோஜனா’ என்ற பொருள் தரும் ‘பிரதமமந்திரி ஜன்தன் யோஜனா’ என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply