அரியானா மக்கள் என் மீது கொண்டுள்ள அன்பிற்கு வட்டியாக வளர்ச்சியை அளிப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

ஹரியானா மாநிலம், கைதாலில் ரூ.1,393 கோடி மதிப்பிலான சாலைப்பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானா மாநில முதலமைச்சர் புபேந்திரசிங் ஹூடா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “புற்று நோயை விட மோசமானது ஊழல். அந்த ஊழல் தற்போது புற்றுநோயைப் போல் பரவி உள்ளது. நம் நாட்டில் இருந்து ஊழல் என்ற புற்று நோயை விரட்ட வேண்டும். ஊழலை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. புற்று நோயை விட மோசமான ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய தலை முறையினருக்காக எங்களது அரசு செயல்பட்டுவருகிறது. நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கப்படும். வளர்ச்சியால் மட்டுமே நம் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க முடியும். குஜராத்தைப்போல் வளர்ச்சி பெற்ற மாநிலமாக ஹரியானா மாற்றப்படும். நான் நாட்டு மக்களின் பிரதம சேவகனாக பொறுப்பேற்றுள்ள போதிலும், ஹரியானா மாநிலத்தின்மீது சிறப்பு கவனம் செலுத்துவேன்” என்றார்.

Tags:

Leave a Reply