அசாம் ,நாகாலாந்து மாநில எல்லையில் உள்ள கொலாகட் பகுதியில் போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்டமோதல் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இருமாநில எல்லைப்பகுதியில் உள்ள ஏழு கிராமங்களில் வசிக்கும் அசாம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் 15 பேர் நாகாலாந்தில் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டுள்ளது.

இந்நிலையில் இப்போராட்டத்திற்கு உண்மையான காரணம் இரு நபர்களுக்கு இடையே உள்ள நிலப் பிரச்சனை தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலப்பிரச்சனையை உள்ளூர் அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆகியோர் தங்கள் சுய லாபத்திற்காக பயன் படுத்தி வருவதாகவும் கண்டரியப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் அறியப்படுவதவது. இருமாநில எல்லைப் பகுதியில் சர்ச்சைக்குள்ளான நிலப்பரப்பில் அசாமைசேர்ந்த ஆதிவாசியான சாலமன் சாமா விவசாயம் செய்துகொள்ள நாகாலாந்தை சேர்ந்த எகாந்தம்ப்க் லோத்தா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். ஆனால் திடீரென ஒப்பந்தத்தை மீறிய லோத்தா அந்தநிலத்தில் குடிசைகட்ட ஆரம்பித்தார். இதனை எதிர்த்து உள்ளூர் தலைவர்களிடம் முறையிட்டார் சாமா. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டாலும் இரு நபர்களுக்கும் இடையே உள்ளுக்குள் மோதல் குறையவில்லை. இதன் தொடர்ச்சியாக இரு ஆதிவாசி சிறுவர்கள் காணாமல்போனார்கள். இந்த சம்பவமே அங்கு தற்போது நடைபெற்று வரும் கலவரத்திற்கு முதல் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:

Leave a Reply