தமிழகத்தில் தொடர்ந்து இந்து இயக்க தலைவர்கள் குறிவைத்து கொள்ளப்பட்டு வருகின்றனர். 2011 ஆண்டில் அக்டோபர் மாதம் 28–ந் தேதி பாஜக மூத்த தலைவர் அத்வானி சென்றபாதையில் 'பைப்' வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு யாத்திரைக்காக தமிழகம் வந்திருந்த அத்வானியை குண்டுவைத்து கொல்ல தீட்டப்பட்ட சதி திட்டம் இதன்மூலம் முறியக்கப்பட்டது.

2012–ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 24–ந்தேதி பாஜக. மருத்துவர் அணி தலைவர் அரவிந்த் ரெட்டி வேலூரில் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார்.

இதன் பின்னர் கடந்தாண்டு இந்து இயக்க தலைவர்கள் தொடர்ச்சியாக குறிவைத்து கொல்லப்பட்டனர்.மார்ச் 19–ந்தேதி பா.ஜ.க முன்னாள் கவுன்சிலர் பரமக்குடி முருகன், ஜூன் 26–ந்தேதி மதுரையில் பால்காரர் சுரேஷ், ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1–ந்தேதி இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையப்பனும், ஜூலை 19–ந்தேதி சேலம் ஆடிட்டர் ரமேசும் (பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ) கொலை செய்யப்பட்டனர். .

இதன்பிறகு போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் 17½ கிலோ வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால்மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் சித்தூரில் பதுங்கி இருந்த போது பிடிபட்டனர். இவர்களின் கூட்டாளியான அபுபக்கர் சித்திக், கடந்த பல ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வருகிறான் .

இந்த வழக்குகளை விரைவாக நடத்திமுடிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் கோர்ட்டு அமைந்துள்ள பகுதியிலேயே இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

Tags:

Leave a Reply