நான்கு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஜப்பான் புறப்பட்டுச்சென்றார். இன்று காலை 6 மணி அளவில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

அரசு முறை பயணமாக இந்தியத் துணை கண்டத்துக்கு வெளியே பிரதமர் மேற்கொள்ளும் முதல்பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின் போது, ராணுவம், ஆக்கப்பூர்வ அணு சக்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, பூமியில் அரிதாக கிடைக்கும் வளங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்த பேச்சு வார்த்தை இடம் பெறு கிறது.

ஜப்பான் புறப்பட்டுச்செல்லும் முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியா, ஜப்பான் உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஜப்பானுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. என்னுடைய பயணத்தின் மூலம் இருநாடுகளிடையேயான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார ரீதியில் இரு நாடுகளும் மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன. இந்திய அணு சக்தி கொள்கையில் மறு ஆய்வு இல்லை.

பாகிஸ்தான் அரசு தரப்பில் ஹூரியத் தலைவர்களை சந்தித்தது அதிருப்தி அளிக்கிறது. எனினும் அந்தநாட்டுடன் அமைதி, நட்புறவை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்று அவர் கூறினார்.

பிரதமரின் சுற்றுப் பயணத்திலேயே கியோடோ நகருக்கு அவர் மேற்கொள்ளவிருக்கும் பயணம் இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என்ற பிரதமரின் கனவு திட்டத்தினை செயல்படுத்த உதவும் என கூறப்படுகிறது.

Leave a Reply