தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணனின் மகள் திருமணவிழா (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூரில் நடந்தது . இந்தவிழாவில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி உள்ளாட்சி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக போட்டி யிடும். மேலும் இந்ததேர்தலில் பாஜக உறுதியாக களம் இறங்கும். இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படஉள்ளது.

அதன் பேரில் வருகிற 2-ந்தேதி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எந்தெந்த பகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து முடிவுசெய்து, அதன் பின்னர் போட்டியிடும் பகுதிகள் அறிவிக்கப்படும்.

பீகாரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் எதிர்கட்சிகள் முரண்பாடான கூட்டணி அமைத்தது. இந்ததேர்தலில் கணிசமான வாக்கு வங்கிகளை பெற்று கவுரமான வெற்றியை பா.ஜனதா பெற்றுள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றபின்பு, ஏழை-எளிய மக்கள் வங்கியில் சேமிப்புகணக்கு தொடங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இதன் மூலம் ஏழை-எளியமக்கள் எளிதில் கடன்பெற முடியும் என்றார் .

Leave a Reply