·எல்லையை விரிவு படுத்தும் நோக்கத்துடன் , மற்ற நாடுகளின் பகுதிகளை சிலநாடுகள் ஆக்கிரமித்து வருகின்றன' என பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாகக் குற்றம் சாட்டி.யுள்ளார்

ஐந்து நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மோடி, தலைநகர் டோக்கி யோவில் இந்திய, ஜப்பானிய தொழிலதிபர்கள் கூட்டத்தில் திங்கள் கிழமை கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சியை மேம்படு த்துவதா? அல்லது எல்லையை விரிவு படுத்துவதா? என்பதை நாம் முடிவு செய்யவேண்டும். புத்தர்வழியில் நடக்கும் நாடுகள், வளர்ச்சியை மேம்படுத்துவதில் கவனம்செலுத்த வேண்டும். ஆனால், மற்றநாடுகளை ஆக்கிரமிப்பதும், அவற்றின் கடல் எல்லைகளில் நுழைவதுமான, 18ஆம் நூற்றாண்டு சிந்தனைகளை சிலநாடுகள் பின்பற்றுவதை நாம் காண்கிறோம் என்றார்.

ஏற்கெனவே, சீனாவுக்கு ஜப்பான், வியட் நாம், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்னை இருப்பதால், அது, சீனாவுக்கு தெரிவிக்கப்பட்ட கண்டனமாகவே கருதப்படுகிறது. இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும், ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் 38,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் தனக்குச் சொந்தமானது என சீனா கூறி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply