நரேந்திர மோடி அரசின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து ள்ளது ஏனென்றால் இந்த 100 நாட்களில் பல்வேறு மக்கள் நலதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார் .

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இந்நிலையில் இது குறித்து தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல் படும் அரசு என்பதை மக்கள் இப்போது உறுதியாக நம்புகிறார்கள். இது வெளிப் படையாக தெரியும்பலன். பிரதமர் நரேந்திர மோடி மந்திரிகளுக்கு மிகவும் சுதந்திரம் வழங்கியிருக்கிறார். எங்களுக்கு அவர் கூறியுள்ள ஒரேமந்திரம், 'நீங்கள் முடிவுகள் எடுப்பதை பெருமையாக கருதவேண்டும். அனைவரும் சொல்வதை கவனியுங்கள், ஆனால் நாட்டுக்கு எது சிறந்ததோ அந்த முடிவை எடுங்கள்' என்பதுதான்.

மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்து ள்ளார்கள், 100 நாட்களுக்காக அல்ல. ஆனால் கடந்த அரசின் 'கொள்கை முடக்கு வாதம்' முடிவுக்குவந்து, இப்போது முடிவுகள் அனைத்து அமைச்சகங்களிலும் எடுக்கப்படுகிறது. பெட்ரோல்விலை 2 முறை குறைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள்வைத்திருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசுமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்த 100 நாட்களில் பல்வேறு மக்கள் நலதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொருளாதாரம் வளர்ச்சிபாதைக்கு திரும்பியுள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறையில் நிலுவையில் இருந்த 17 திட்டங்களுக்கு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கங்கையை மாசு படுத்தும் தொழிற் சாலைகளை ஆன்லைன் மூலம் கண் காணிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கறைப்படுத்த காங்கிரஸ் சதிசெய்கிறது. ஆனால் அவர்களால் மோடி அரசு மீது ஒரு விரலைகூட சுட்டிக்காட்ட முடியாது. என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Leave a Reply