கடும் வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துஇருக்கும் காஷ்மீர் மக்கள் யாரும் தனியாக இருக்கிறோமோ என்று கவலைப்பட வேண்டாம். மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளும்செய்யும் என்பதுடன் இந்தியர்கள் அனைவரும் உங்களுக்கு துணையாக இருப்போம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வெள்ளதேசம் குறித்து ஆய்வுசெய்வதற்காக பிரதமர் மோடி காஷ்மீர் சென்றார். அங்கு முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டம்முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய பிரதமர்; ஜம்மு – காஷ்மீரில் கடந்த 50 ஆண்டு காலம் இல்லாத அளவிற்கு மழைபெய்துள்ளது. இங்கு தேசியபேரிடர் நிகழ்ந்துள்ளது. இம்மாநில மக்களுக்கு இயல்பு வாழ்வு திரும்பும்வரை மத்திய அரசு , மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு அனைத்து உதவிகளையும் செய்யும். ராணுவத்தினர், தேசிய பேரிடர்குழுவினர் மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தேசிய நிதியில் இருந்து முதல்கட்டமாக ஆயிரம்கோடி ரூபாய் வழங்கிட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. மக்கள் குளிரில் இருந்து தங்களை காத்துகொள்ள உடனடியாக ஒருலட்சம் போர்வைகளும் வழங்கப்படும். மேலும், 5 ஆயிரம் டெண்ட்டுகளும் அனுப்பி வைக்கப்படும். மீட்புபடகுகள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அனுப்பிவைக்கப்படும் . பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கும் அரசு உதவிட தயாராக இருக்கிறது. தரை வழிப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நிவாரணப் பொருட்கள் அனைத்தும் வான்வழியாக கொண்டுவரப்படும்.

பாதிப்பினால் ஜம்மு காஷ்மீர் மக்கள் யாரும் கவலைகொள்ள வேண்டாம். இவர்களுக்கு மத்திய அரசும், இந்திய மக்கள் அனைவரும் துணைநிற்போம். இவ்வாறு பிரதமர் கூறினார்.

Leave a Reply