காஷ்மீர் வெள்ள நிவாரணபணிகள் குறித்து உயர்மட்ட அவசரகூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அத்தியாவசிய பொருட்களை விரைவாக அனுப்ப முன்னுரிமை தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காஷ்மீர் வெள்ளநிவாரண மற்றும் மீட்புபணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர்மட்ட அவசர கூட்டத்தை கூட்டினார். அதற்கு அவரே தலைமை தாங்கினார்.

முப்படையினர் செய்துவரும் நிவாரண பணிகள் குறித்து ராணுவ அதிகாரிகள், பிரதமரிடம் விளக்கிக்கூறினர். காஷ்மீரில் உணவு தானிய இருப்புகுறித்து மோடி கேட்டறிந்தார்.

காஷ்மீரில், தொலைத் தொடர்பு வசதிகள் மறு சீரமைக்கப்பட்டது குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். மீட்பு மற்றும் நிவாரணபணிகளில் காஷ்மீர் அரசுக்கு முழுஒத்துழைப்பு அளிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அனுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அத்தியாவசிய பொருட்கள் வேகமாக சென்றடைய உரியநடவடிக்கை எடுக்குமாறும் வற்புறுத்தினார்.

டெல்லி மற்றும் இதரமாநிலங்களில் இருந்து உயர் அதிகாரிகளை உடனடியாக காஷ்மீருக்கு அனுப்புமாறு மத்திய உள்த்துறை அமைச்சகத்துக்கு மோடி உத்தரவிட்டார். அந்த அதிகாரிகள், அங்கு மாநில அதிகாரிகளுடன் நிவாரணபணிகளை ஒருங்கிணைந்து செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

தண்ணீர் தேங்கிய பகுதிகளில் துப்புறவு மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தொண்டு நிறுவனங்களின் பணிகளை ஒருங்கிணைக்குமாறும் அதிகாரிகளை வற்புறுத்தினார்.

Leave a Reply