உள்ளாட்சி இடைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

தக்கலை பாஜக நகரநிர்வாகிகள் ஆலோசனை கூட்டதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் நடை பெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும். குறிப்பாக குமரிமாவட்டத்தில் நடைபெறும் இடைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும். திமுக உள்ளாட்சி இடைத்தேர்தலில் நிற்காததற்கு காரணம் அரசு பதவியில் இருந்தால் என்ன நடக்கும்என்பது அவர்களுக்குத் தெரியும். அதன் மூலம் பயன் அடைந்தவர்கள் அவர்கள். அதனால் தான் அவர்கள் இடைத்தேர்தலில் நிற்கவில்லை என்றார் அவர்.

உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்து உயிரிழந்த குழித் துறை கோபாலன் யானைக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அஞ்சலி

கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலைய துறைக்கு சொந்தமாக இந்திரன், காளி,  ராஜன், கணேசன், கோபாலன் ஆகிய 5 யானைகள் இருந்தன. கோபாலன் தவிர பிறயானைகள் ஏற்கெனவே இறந்து விட்டன. பார்ப்பதற்கு கம்பீர தோற்றமுடைய கோபாலன் யானை இம்மாவட்ட பக்தர்களின் மனதில் இடம்பெற்றதோடு, கோயில் விழாக்களிலும் வலம் வந்து கொண்டிருந்தது. இந்த கோபாலன் யானையின் வயது 66. குழித் துறை மகாதேவர் கோயில் அருகே பராமரிக்கப்பட்டு வந்தது

இந்நிலையில்  கடந்த ஜனவரி மாதம், மதம் பிடித்ததை தொடர்ந்து , யானைகள் புத்துணர்வு முகாமுக்கு கொண்டு செல்லப் படாமல் இங்கேயே கட்டி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 20 நாள்களாக உணவு ஜீரணம் ஆகாமலும், கழிவுகள் வெளியேறாமலும் மலக் கட்டு நோயால் யானை அவதிப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து  கேரளத்திலிருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால் யானை செவ்வாய்க் கிழமை மாலை 6.30 மணியளவில் இறந்தது.

கோபாலன் யானை இறந்தது குறித்து தகவல்அறிந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை இரவு அப் பகுதிக்குவந்து அந்த யானைக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் கூறும் போது, குமரிமாவட்ட கோயில்களுக்கு சொந்தமாக 5 யானைகள் இருந்தன. குழித்துறை கோபாலன் யானைமட்டுமே கோயில் விழாக்களில் பங்கேற்று வந்தது. தற்போது உடல் நலக் குறைவால் கோபாலன் யானை இறந்து விட்டதால், இம் மாவட்டத்தில் நடக்கும் கோயில் விழாக்களில் பங்கேற்க யானைகள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஆகவே தமிழக அரசு உடனடியாக 3 யானைகளை வாங்கி கன்னியா குமரி மாவட்ட அறநிலைய துறைக்கு வழங்கவேண்டும். குமரி மாவட்ட மக்களை பொருத்தவரை குழித்துறை கோபாலன் யானையின் இறப்பு ஒரு மிகப் பெரிய இழப்புதான் என்றார் அவர்.

Leave a Reply