நியூயார்க் நகரில் 28–ந்தேதி நரேந்திர மோடியை வரவேற்க்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன .

பிரதமர் பதவி ஏற்றபிறகு நரேந்திர மோடி முதன் முதலாக இந்த மாதக் கடைசியில் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அவர் 26–ந்தேதி நியூயார்க் போய்ச்சேருகிறார்.

மறுநாளில் (27–ந் தேதி) அங்கு ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசுகிறார். அமெரிக்க தொழில் அதிபர்களையும் சந்தித்து, இந்தியாவில் தொழில்தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

28–ந்தேதி அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நியூயார்க்கில் மோடிக்கு பிரமாண்டவரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்குள்ள மேடிசன் சதுக்ககார்டனில் நடக்கிற விழாவில், 20 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியை அமெரிக்காவில் 20 நகரங்களில் இந்தியர்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் 'மிஸ் அமெரிக்கா' அழகி நினா தவுலுரி (வயது 25) கலந்துகொள்கிறார். இவர் 'மிஸ் அமெரிக்கா' அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்கவாழ் இந்தியப்பெண் என்ற சிறப்புக்கு உரியவர். மேலும், பிரபல டி.வி. நிகழ்ச்சிதொகுப்பாளர் ஹரி சீனிவாசன், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இது தொடர்பாக இந்திய அமெரிக்க சமூக அறக் கட்டளை (ஐஏசிஎப்) செய்திதொடர்பாளர் ஆனந்த் ஷா கூறியதாவது:–

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான நரேந்திர மோடியின் பேச்சை கேட்பதற்கு, உலகத்தின் பெரிய ஜனநாயக நாடான அமெரிக்க குடிமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு அமெரிக்காவில் உள்ள 400க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகளின் ஆதரவுஉள்ளது. பிரதமர் மோடிக்கு அளிக்கப்படவுள்ள பிரமாண்ட வரவேற்பில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மிகுந்த ஊக்கம் கொண்டுள்ளனர் என்றார்.

Leave a Reply