பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக உத்தரபிரதேச நீதிமன்றத்தில் போலீசார் நேற்று தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையை, திடீர் திருப்பமாக நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல்பிரசாரத்தின் போது உத்தரபிரதேசத்தில் பேசிய அமித்ஷா, 'முசாபர்நகரில் கடந்த ஆண்டு கலவரத்தின்போது நம்மை அவமானப் படுத்தியவர்களை பழிவாங்குவதற்கு ஒரு வாய்ப்பாக 2014 பாராளுமன்ற தேர்தல் அமைந்துள்ளது' என கூறியதாக தெரிகிறது.

அதாவது ஜனநாயக முறைப்படி நமது எதிரிகளை பழிவாங்குவோம் என்ற ரீதியிலேயே அவர் கூறியதாக தெரிய வருகிறது. பின்னர் இந்தசம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் நியூ மண்டி போலீசார் அமித்ஷா மீது வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கில் அங்குள்ள நீதிமன்றத்தில் நேற்று போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக போலீசார் தாக்கல்செய்த குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளின் படி தாக்கல்செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை சீரானதாக இல்லை என மேற்கோள்காட்டி நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது.

அமித் ஷாவுக்கு எதிரான குற்றபத்திரிக்கையில் நீதிமன்றம் எழுப்பிய ஆட்சேபனை குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். குற்றப்பத்திரிக்கையை திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply