பாஜக தலைவர் அமித் ஷாவை கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று சந்தித்துபேசினார். எதிர் வரும் ஹரியானா சட்ட சபை தேர்தலில் பாஜக.,வுக்காக யுவராஜ் சிங் பிரசாரம் செய்ய முடிவு செய்திருப்பதை தொடர்ந்து இந்தசந்திப்பு நடைபெற்றுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள

90 சட்ட சபை தொகுதிகளுக்கு அக்டோபர் 15-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் ஆளும் இம்மாநிலத்தில் வெற்றிபெற பாஜக மும்முரமாக வியூகம்வகுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேர்தல்களத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை களமிறக்குகிறது பாஜக., பாஜக தலைவர் அமித் ஷாவை யுவராஜ் சிங் இன்று சந்தித்துப் பேசினார், இந்த சந்திப்பின் போது ஹரியானா நிலவரம் குறித்தும் நடப்பு அரசியல் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

Leave a Reply