2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில், முறைகேடுகள் நடந்தபோது மத்திய அமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜியும், கமல் நாத்தும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை எச்சரித்தும், அவர் செயல்படாமல் தடுத்தசக்தி எது என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

2ஜி அலைக் கற்றை முறைகேடு குறித்து மத்தியகணக்கு தணிக்கையாளராக இருந்த வினோத் ராய் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எழுதிய அனைத்து கடிதங்களுக்கும், மன்மோகன்சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அலைக்கற்றை முறைகேடு குறித்து எச்சரிக்கை வெளியிட்டு நான் எழுதியகடிதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அனுப்பவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply