தனது பிறந்த நாளை கொண்டாடவேண்டாம் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார்.பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்முகாஷ்மீரின் நிவாரண பணிகளுக்கு உதவுமாறும் தனது நண்பர்களையும், நல விரும்பிகளையும் பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

17ம் தேதி நாடுமுழுவதும் வரும், நரேந்திர மோடியின் 64 ஆவது பிறந்த நாளைக்கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், மோடி இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நரேந்திர மோடி கூறியதாவது:-

"எனது பிறந்தநாளுக்காக பல்வேறு திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்த எனது நண்பர்களும், நலவிரும்பிகளும் திட்டமிட்டு வருவதாக பல்வேறு பகுதிகளில் இருந்து நான் கேள்விப் படுகிறேன்.

எனினும், எனது பிறந்த நாளை கொண்டாடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பதிலாக, உங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவழித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்முகாஷ்மீரின் நிவாரண பணிகளுக்கு உதவுங்கள்.

ஜம்மு-காஷ்மீரின் சகோதர, சகோதரிகளுக்கு நாம் தோளோடுதோள் நின்று உதவுவதே இப்போதைய தேவையாகும். சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரும் 17 தேதி குஜராத் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு நாம் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.

அன்று எனது பிறந்தநாள் கொண்டாட்டம் எதுவும் நடைபெறாது'' என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply