இந்தியாவில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈட்டப்படும் வருமானம், தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களுக்குப் பயன் படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதிசெய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது , சட்ட விரோதமாக நடத்தப்படும் இறைச்சி வர்த்தகத்தினால் தீவிரவாதிகள்தான் பயனடைகின்றனர் தீவிரவாதிகளுக்குப் பயனளிக்கும் இந்தச் சட்ட விரோத செயல்களைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனாவைவிட இந்தியாவில் தான் விலங்குகளின் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் அவை அதிகமாக கொல்லப்படுகிறது. இவை இந்தியநாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் தீவிரவாத செயல்களுக்கு மூலதனமாக சென்றடைகிறது

இதனால் இந்தியாவில் விலங்குகளைக் கொலைசெய்யவும், இறைச்சிகளை ஏற்றுமதிசெய்யவும் வகுக்கப்பட்டுள்ள சட்டங்களை முழுமையாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் . இந்தச்சட்ட நுணுக்கங்களை, விலங்கின பாதுகாப்பு ஆர்வலர்கள் அனைவரும் நன்றாக அறிந்திருக்கவேண்டும் என்றும், இதை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உதவவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

Leave a Reply