இடைத் தேர்தல் பின்னடைவிற்காக பா.ஜ.க தொண்டர்கள் கவலைப்படத் தேவையில்லை.'' என்று பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 1948ம் ஆண்டு ஐதராபாத் நிஜாமின் படையினரால் கர்நாடக மாநிலம் பீதர்மாவட்டம் கோர்ட்டா கிராமத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 17–ந்தேதி நிஜாமின் ஆளுகையின் கீழ் இருந்த இந்த ஐதராபாத் கர்நாடக பகுதி இந்திய யூனியனில் இணைந்தது. இதையொட்டி ஐதராபாத்–கர்நாடக தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பாஜக சார்பில் கோர்ட்டா கிராமத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை மற்றும் தியாகிகள் நினைவு சின்னத்திற்கு அடிக்கல் நாட்டும்விழா நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் கூறியதாவது:– "இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஏற்பட்ட பின்னடை வுக்காக நமது கட்சி தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை. இதனால் எதிர்க் கட்சிகள் புத்துணர்வு பெற்றது போல் உணர்கிறார்கள். ஆனால் அவர்கள் நாம் அசாம் மாநிலத்தில் கணக்கை தொடங்கியுள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

அடுத்து வரஇருக்கின்ற 4 மாநில தேர்தலில் பாஜக மகத்தான வெற்றியைபெற இருக்கிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற திட்டத்தோடு நாம் முன்னெடுத்து செல்ல இருக்கிறோம்.

எனவே நமதுதொண்டர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைக்கவேண்டும். அரியானா, மராட்டிய சட்ட சபை தேர்தல் அக்டோபர் மாதம் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 19–ந்தேதி நடக்கிறது. அன்று வெற்றியைகொண்டாட நமது தொண்டர்கள் தயாராக இருக்கவேண்டும்.''இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Leave a Reply