இந்திய முஸ்லிம்கள் அல்காய்தா தீவிரவாத இயக்கத்தினரின் தாளத்திற்கு ஆட மாட்டார்கள் அவர்கள் இந்தியராகவே வாழ்ந்து, மறைவார்கள்.அல்காய்தா இயக்கத்தினர் இந்திய முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்துவருகின்றனர். எனவே, இந்திய முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள் என அல்-காய்தாவினர் நினைத்தால் அது

வெறும் மாயத் தோற்றமே. இந்திய முஸ்லிம்கள் தேசத்திற்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள் என்று தனியார் தொலைக் காட்சி ஒன்றிற்கு பிரதமர் நரெந்திர மோடி அளித்த பேட்டியில கூறி இருந்தார்.

மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு முஸ்லீம் தலைவர்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். லவ்ஜிகாத் என்று குற்றம் சாட்டி வருபவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமரின் கருத்து அமைந்துள்ளது. பிளவை உருவாக்க முயற்சி செய்பவர்களுக்கு பிரதமர் மோடி தகுந்தபதிலடி கொடுத்துள்ளார் என்று இஸ்லாமிய மதகுரு முப்தி முகாரம் தெரிவித்தார்.

ஷாபார் சரேஷ் வாலா என்ற மற்றொரு முஸ்லீம் தலைவர் கூறுகையில், முஸ்லீம்கள்மீது மோடி நம்பிக்கை வைத்துள்ளார். முஸ்லீம்கள் பற்றிய மோடியின் இந்த எண்ணம் புதிதல்ல. நாங்கள் ஏற்கனவே அவரைபற்றி அறிந்து இருக்கிறோம். தற்போது ஒட்டுமொத்த உலகமும் அவரை பற்றி தெரிந்துகொண்டுள்ளது. முஸ்லீமகள் குறித்து மோடியின் பார்வையை சந்தேகத்திவர்களுக்கு இது பதிலடிகொடுக்கும் விதமாக அமைந்துள்ளது என்றார்.

பாரதீய ஜனதா தலைவர் ஷனாவாஷ் ஹூசைன் கூறுகையில், சிறுபான்மையினர் குறித்த கட்சியின் கருத்தைதான் மோடி தெரிவித்துளார். மோடியின் அறிக்கை மிகவும் நன்றாக இருந்தது. இந்திய முஸ்லீம்கள் எப்போதும் இந்தியாவுக்காத் தான் வாழ்வார்கள் , தேசத்துக்காகத் தான் முடிவார்கள். கார்கில் போரில்கூட நாம் இதை பார்த்தோம். நாங்கள் சிறுபான்மையினருடன் உள்ளோம் என்றார்.

Leave a Reply