இந்தியாவில் உற்பத்திசெய்யுங்கள்' என்ற பிரசார இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

மோடி தனது சுதந்திரதின உரையின் போது, இந்தியாவுக்கு வந்து பொருள்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளை அமைக்குமாறு உலகளாவிய வர்த்தக சமூகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, "இந்தியாவில் உற்பத்திசெய்யுங்கள்' என்ற பிரசார இயக்கத்தை அவர், தில்லியில் வரும் 25ம் தேதி தொடங்கிவைக்கிறார்.

தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ள இதற்கான விழாவில் நூற்றுக்கும் அதிகமான சர்வதேச, உள்நாட்டுத் தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.

அடுத்தகட்டமாக, இந்தப்பிரசார இயக்கம் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட அனைத்து மாநில தலை நகரங்களிலும் தொடங்கப்பட உள்ளது. சில வெளிநாடுகளிலும் இந்த இயக்கம் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம் நாட்டில் மிகப் பெரும் அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், வர்த்தக, பொருளதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும் இந்தப்பிரசார இயக்கத்தின் நோக்கமாகும்.

Tags:

Leave a Reply