அரியானா மாநிலத்தில் அக்டோபர் 15 ம் தேதி சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அங்குள்ள 90 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவுசெய்ய பாஜக அவசரக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைப்பெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார்.

அரியாணாவில் உள்ள 90 சட்ட மன்ற தொகுதிகளில் ஏற்கெனவே 43 தொகுதிகளுக்கு கடந்த 9ம்தேதி வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. இந்நிலையில் மீதமுள்ள 47 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவுசெய்ய இந்த அவசரக் கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது .

இந்தக் கூட்டத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா தலைமை தாங்குகிறார் . உடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி, ம.பி., முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தவிர, கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் கூட்டத்தின் போது உடனிருந்தனர்.

Leave a Reply