தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி இடைத் தேர்தல் முறையாக நடைபெற வில்லை என்று பாஜக வின் மூத்த தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்த இல.கணேசன், உள்ளாட்சி இடைத் தேர்தல் நடந்தவிதம், மக்களுக்கு தேர்தல் அமைப்பின் மீது நம்பிக்கை இழக்கச்செய்துள்ளது . மேலும், தமிழக மீனவர்கள் பிரச்னையில் விரைவில் சுமூகதீர்வு காண பாரதிய ஜனதா முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது

இது தொடர்பான ஆலோசனையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரமணியன் சுவாமி தெரிவித்து வரும் கருத்துகள், பாஜக வின் கருத்து அல்ல என்றும் இல.கணேசன் விளக்கமளித்தார்.

Leave a Reply