எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையேயான உறவு மிகவும் புனிதமானது, உணர்வுப் பூர்மானது, ஆழமானது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இது குரித்து ராஜ்நாத் சிங் மேலும் கூறியதாவது:

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்கள் உறவு ஆழமாக வளர்ந்துள்ளது.

மோடிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு மிகப்புனிதமானது. உணர்வுப் பூர்மானது, ஆழமானது. அந்த உறவு எதன் காரணமாகவும் பாதிப்படையாது. நான் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தப் பட்டாலும், உறவில் பாதிப்பு ஏற்பட விடமாட்டேன்.

என் பொது வாழ்க்கையில், நம்பகத் தன்மை தான் நான் சம்பாதித்த ஒரேசொத்து. எனது காலத்தை விலங்கை போல வீணாகக் கழிக்கமாட்டேன். ஒருவருடன் ஆழ்ந்த உறவு ஏற்பட்டுவிட்டால், அவரை எவ்விதத்திலும் காயப்படுத்த நான் நினைக்கமாட்டேன்.

கடந்த காலத்தில் எனக்கு எதிராக சிலர்புகார் கூறியிருந்தது சில குழப்பங்களினால் விளைந்தது. அவர்களுடன் வெளிப்படையாக பேச நான் தயார். அப்பிரச்சினைகளை தீர்க்கவும்தயார்.

என்று , ராஜ்நாத் தெரிவித்தார்.

Leave a Reply