மத்திய அரசு ஊழியர்களின் கண் காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டதை தொடர்ந்து வருகைப்பதிவை 'பயோ மெட்ரிக்' முறையில் செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. பல்வேறு அலுவலகங்களில் இதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

தற்போது பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் 1816 பயோமெட்ரிக் இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதற்காக 43 ஆயிரம் ஊழியர்களின் விவரம் பதிவு செய்யப் பட்டுள்ளது. இது வரை 163 மத்திய அரசுத் துறைகள் இந்த திட்டத்தை தங்களது அலுவலகங்களில் செயல் படுத்துமாறு விண்ணப் பித்துள்ளன. இந்ததிட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் வருகைப் பதிவு இணைய தளம் மூலம் கண்காணிக்கப்படும் என்று மத்திய தகவல்தொழில் நுட்பத் துறை செயலாளர் ராம் சேவக் சர்மா கூறினார்.

மேலும் மத்திய அரசு ஊழியர்களின் வருகைப் பதிவு இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் முழுமையான செயல் பாட்டுக்கு வரும். பணி நிமித்தம் மத்திய அரசு ஊழியர்கள் வேறு அலுவலகங்களுக்கு சென்றாலும், அங்கேயும் அவர்கள் பயோமெட்ரிக் அட்டையை பயன்படுத்தி வருகையை பதிவு செய்யலாம். இதன் மூலம் ஊழியர்களின் இயக்கத்தை அரசு சுலபமாக கண்காணிக்க முடியும் என்று ராம்சேவக் சர்மா கூறினார்.​

Tags:

Leave a Reply