சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்தது. இந்தவழக்கை விசாரித்துவந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. முதலில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். அதன்பிறகு மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா! குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் போலீசார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர். இந்நிலையில் சிறைதண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பரப்பன அக்ரஹா ராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச் சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக சிறைச் சாலை வளாகத்திலுள்ள மருத்துவ மனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவபரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அ.தி.மு.க.,வினர் கண்ணீர் விட்டு அழுதனர். சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து வரவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறும்வரை இந்த சிறையில்தான் ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பர்.

Leave a Reply