சொத்துகுவிப்பு வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

18 ஆண்டுகள் நடந்த வழக்கில் இப்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை பாஜக மதிக்கிறது. நீதிக்கு உட்பட்டே அனைவரும் நடக்கவேண்டும்.

இதுபோன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு வருங்காலத்தில் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். நீதி மன்றத்தால் தமிழக முதல்வருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இது அ.தி.மு.க.வினருக்கு வருத்தத்தை கொடுத்திருக்கும். தற்போது இங்கு அதிமுக. ஆட்சி நடந்துவருகிறது. எனவே அவர்கள் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார்

Leave a Reply