அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊழியர்களை சந்தித்துப்பேசிய பிரதமர் மோடி, அவர்களது குழந்தைகளுடன் உற்சாகமாக புகைப் படங்களும் எடுத்துக் கொண்டார். அமெரிக்க பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து பல்வேறு விருந்தோம்பல்கள், சந்திப்புகளில் பிசியாக இருக்கிறார்.

துணை ஜனாதிபதி ஜோபிடன் கொடுத்த மதிய உணவு விருந்தில் கலந்துகொண்ட அவர், அதேபோல வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கொடுத்த விருந்திலும் கலந்துகொண்டார்.

மேலும் வாஷிங்டனில், இந்திய அமெரிக்க சமூகத் தினரையும் அவர் சந்தித்து உரையாடினார். இந்திய தூதரகத்திற்கு வெளியே கூடியிருந்த இந்தியர்களை பார்த்து அவர் கையசைத்தார். இந்திய தூதரகத்திற்குள் அவர் தூதரக அதிகாரிகளுடன் தனித்தனியாக பேசினார். கை குலுக்கினார். போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார். தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்தார். இந்தநிகழ்ச்சியில் தூதர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மேலும் பல தூதரக ஊழியர்களின் பிள்ளைகள், பள்ளிக் கூடத்தைக் கட் அடித்துவிட்டு மோடியைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களுடனும் ஜாலியாக பேசினாராம் மோடி.

Leave a Reply